/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய வாக்காளர் தினம் கொண்டாட்டம்; இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

ADDED : ஜன 26, 2024 05:22 AM

புதுச்சேரி : தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு, இளம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீத ஓட்டுப் பதிவினை நோக்கமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடி வருகிறது.
அதன்படி, 14-வது தேசிய வாக்காளர் தினம், ஓட்டளிப்பதே சிறந்தது; நிச்சயம் ஒட்டளிப்பேன் என்ற கருப்பொருளுடன் கம்பன் கலையரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது.
துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் வரவேற்றார். தலைமை செயலர் ராஜிவ் வர்மா தலைமை தாங்கி முதல் முறை வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அட்டையை வழங்கினார். சிறந்த தேர்தல் அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
நடமாடும் ஓட்டுச்சாவடி வாகனத்தை தலைமை செயலர் ராஜிவ் வர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கலெக்டர் வல்லவன் வாழ்த்தி பேசினார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் சிறப்புரையாற்றினார். துணை தலைமை தேர்தல் அதிகாரி ஆதர்ஷ் நன்றி கூறினார்.