/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சாரியா கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா
/
ஆச்சாரியா கல்லுாரியில் தேசிய இளைஞர் தின விழா
ADDED : ஜன 27, 2024 06:32 AM

புதுச்சேரி : ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை மற்றும் செந்நாடா சங்கம் சார்பில், தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி துணை முதல்வர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சண்முகராஜ் விழாவினை துவக்கி வைத்தார். செந்நாடா சங்கம் ஒருங்கிணைப்பாளர் பஞ்சாட்சரம் வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் அஸ்கர் அலி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தமிழ்த் துறை தலைவர் குழந்தைசாமி கலந்து கொண்டு, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தமிழ்த்துறை பேராசிரியர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்.
விழாவில், பலதுறை சார்ந்த மாணவர்கள், பேராசிரியர் கலந்து கொண்டனர்.

