/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
நவதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
நவதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
நவதுர்கா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 24, 2025 11:28 PM

புதுச்சேரி : திருவண்டார்கோவில் ஸ்ரீ நவதுர்கா மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவி நித்யஸ்ரீ 491 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி பிரியதர்ஷினி 489 மதிப்பெண் பெற்று 2வது இடம், மாணவி மதுமிதா 486 மதிப்பெண் எடுத்து 3வது இடம் பிடித்தனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். அறிவியலில் நித்யஸ்ரீ சென்டம் எடுத்தார். தமிழில் 99, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 98, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் கல்விக் குழு தலைவர் சத்யா நடராஜன், பள்ளி முதல்வர் விவேக் நடராஜன் ஆகியோர் பாராட்டினர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் வினோதினி, பொறுப்பாசிரியர் செங்கேணி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
கல்விக்குழு தலைவர் சத்யா நடராஜன் கூறுகையில், '10ம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 38 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேரும் எடுத்துள்ளனர். மாணவர்களுக்கு கராத்தே, சிலம்பம், நடனம், இசை மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறோம்.
10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டண சலுகை அளித்து வருகிறோம்' என்றார்.