/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூலக்குளத்தில் 2 மாதத்தில் பயணிகள் நிழற்குடை பொதுப்பணித்துறை அறிவிப்பு

ADDED : ஜன 10, 2024 02:03 AM
புதுச்சேரி : மூலக்குளத்தில் பயணிகள் நிழற்குடை இரு மாதத்தில் அமைக்கப்படும் என, பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலை, மூலக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை திடீரென மாயமானது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மூலக்குளம் பகுதியில் இருந்த நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படாத வகையில் பழுதடைந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த நிழற்குடை அகற்றப்பட்டது.
இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ., அங்கு மீண்டும் நிழற்குடை அமைக்க கோரிக்கை வைத்தார்.
இந்திரா சதுக்கம் முதல் எம்.என்.குப்பம் வரை சாலை அமைக்கும் பணியிலே, மூலக்குளத்தில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. சாலை விரிவாக்கம் பணிகள், பக்க வாய்க்கால் கட்டும் பணிகள் ஆகிய அனைத்தும் முடிவடைந்த பின்னர், புதிய நிழற்குடை அமைக்கப்படும். இன்னும் 2 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, நிழற்குடை அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.