தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை

முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை

முதியோர்களுக்கு உதவி தொகை ஆணை


ADDED : அக் 13, 2025 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்; பாகூர் தொகுதியை சேர்ந்த 300 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், முதியோர், விதவைகள் உள்ளிட்டோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் தொகுதியில் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கிடும் நிகழ்ச்சி பாகூர் விஜயவர்தினி மகாலில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, முதியோர் மற்றும் விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் என, 300 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கர், தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி மாநில அமைப்பாளர் தவமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us