தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படகு விபத்தில் உரிமையாளர் கைது

 படகு விபத்தில் உரிமையாளர் கைது

 படகு விபத்தில் உரிமையாளர் கைது


ADDED : பிப் 21, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கர்நாடக மாநிலம், பெங்களூரு குஷால் நகர், சவுகார் லைன் பகுதியை சேர்ந்தவர் விஜய், 36. இவர், தன் குடும்பம் மற்றும் உறவினர்கள் என, மொத்தம் எட்டு பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர்.

நேற்று முன்தினம், சுற்றுலா பயணியர் அனைவரும், வீராம்பட்டினம் முகத்துவாரம் அருகே, உரிமம் இல்லாமல் நிறுத்தியிருந்த பைபர் படகில் சவாரி செய்தபோது, முகத்துவாரம் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், விஜய் மனைவி சோனியா, 32, படகு அடியில் சிக்கி உயிரிழந்தார். இதில், 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, படகின் உரிமையாளரான விஜயகுமார், 38, என்பவரை நேற்று, அரியாங்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us