ADDED : அக் 08, 2024 03:08 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: வெங்கடேச பெருமாள் பக்தஜனசபா சார்பில் 32ம் ஆண்டு திருப்பதி திருமலை பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு தனியார் திருமண நிலையத்திலிருந்து துவங்கிய பாதயாத்திரையில், வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா தலைவர்ஜெயச்சந்திரன் தலைமையில் பாரதி பூங்கா,பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த 17ம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர்.
இதில், பூபதி, ஜெககாந்தன், கண்ணன்,மதுரகிரி ராமானுஜதாசன், கணபதி,சிவராமன், செந்தில்,அன்பழகன், ஜெயமூர்த்தி, ஆனந்தன், சிவராஜ்,ஏழுமலை,செங்குட்டுவன்,பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
