/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ், சாய் கிரிக்கெட் அணிகள் அபார வெற்றி
/
போலீஸ், சாய் கிரிக்கெட் அணிகள் அபார வெற்றி
ADDED : ஜன 17, 2024 12:51 AM

புதுச்சேரி : டி 20 கிரிக்கெட் போட்டியில் போலீஸ் அணி, சாய் கிரிக்கெட் அணி ஆகியவை அபார வெற்றி பெற்றன.
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் அசோசியேஷன் சார்பில், லாஸ்பேட்டை மைதானத்தில் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், 21வது போட்டியில் ஜிப்மர் கிரிக்கெட் அணியும், சாய் கிரிக்கெட் அணியும் மோதியது.
முதலில் களமிறங்கிய சாய் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் முருகன் 65 ரன்கள், தியாகு 51 ரன்கள், வெங்கடேஷ் 41 ரன்கள் எடுத்தனர். பின், களம் இறங்கிய ஜிப்மர் கிரிக்கெட் அணி 14 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்னேஷ் 20 ரன்கள் எடுத்தார். ரகு, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் எடுத்தார்னர். சாய் கிரிக்கெட் அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
22வது போட்டியில் கபில்தேவ் கிரிக்கெட் அணியும், கோர்க்காடு கிரிக்கெட் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த கோர்க்காடு கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது. அந்த அணியின் மனோஜ் 38 ரன்கள், ஜெயப்பிரகாஷ் 34 ரன்கள் எடுத்தனர். மாணிக் மற்றும் சந்திரமவுலி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய கபில்தேவ் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹர்ஷவர்தன் 56, விஸ்வேஸ்வரன் 33, மானிக் 31 ரன்கள் எடுத்தனர்.
பிரவீன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். கோர்க்காடு கிரிக்கெட் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
23வது போட்டியில் புதுச்சேரி போலீஸ் கிரிக்கெட் அணியும், வாரியர் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய போலீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் பிரபு 31 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சர் விளாசி 69 ரன்கள் எடுத்தார். சபரி 32 பந்துகளில் 5 பவுண்ரி, 5 சிக்சர் அடித்து 63 ரன் எடுத்தார். கலைராஜன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பின் களம் இறங்கிய வாரியர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹரி 49 ரன் எடுத்தார்; மதி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். புதுச்சேரி போலீஸ் கிரிக்கெட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

