/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
/
வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 14, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : வீட்டு கதவை திறந்து பீரோவில் 2 சவரன் தங்க நகைகளை திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தவளக்குப்பம், மணல்மேடு வீதியை சேர்ந்தவர் பாலு, 59; ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றனர். பின், வீட்டுக்கு வந்த போது, முன்பக்க தகவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்தசெயின், மோதிரம் என, மொத்தம் 2 சவரன் தங்க நகைகளை காணாமல் போயிருந்தது.அவற்றின் மதிப்பு, 1.5 லட்சம் ஆகும். இதுகுறித்து, புகாரின், பேரில் தவளக்குப்பம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.