/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் எஸ்.பி., சட்டையை பிடித்து மல்லு கட்டிய 3 பேர் சிறையிலடைப்பு
/
போலீஸ் எஸ்.பி., சட்டையை பிடித்து மல்லு கட்டிய 3 பேர் சிறையிலடைப்பு
போலீஸ் எஸ்.பி., சட்டையை பிடித்து மல்லு கட்டிய 3 பேர் சிறையிலடைப்பு
போலீஸ் எஸ்.பி., சட்டையை பிடித்து மல்லு கட்டிய 3 பேர் சிறையிலடைப்பு
ADDED : ஜன 10, 2024 01:48 AM
புதுச்சேரி : காமராஜர் சாலையில் எஸ்.பி.யிடம் மல்லுக்கட்டிய மூவர் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி காமராஜர் சாலையில், ராஜா தியேட்டர் சிக்னல் துவங்கி பிருந்தாவனம் வரை, சாலையின் இருபக்கமும் நிறுத்தும் வாகனங்கள், சரக்கு இறக்க ஏற்ற வரும் வாகனங்களால் எப்பொழுதும் டிராபிக் ஜாம் ஏற்படும்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு, ஜீவா ருக்மணி தியேட்டர் எதிரில் இரு பைக்குகள் மோதிக் கொண்டது. பைக்கில் வந்தவர்கள் சாலையில் நின்று தகராறு செய்தனர். அப்போது பின்னால் வந்த, காரின் டிரைவர் வழிவிட கோரி ஹாரன் அடித்தார்.
தகராறில் ஈடுபட்ட வாணரப்பேட்டை, ராசு உடையார்தோட்டம், வின்சென்ட் மகன் வசந்த், 22; கார் டிரைவரிடம் தகராறு செய்தார். வசந்திற்கு ஆதரவாக அவரது நண்பர்கள் வாணரப்பேட்டை ராசு உடையார்தோட்டம் முருகன் மகன் திவாகர், 24; குருபரன் மகன் சதிஷ், 23; ஆகியோரும் கார் டிரைவரிடம் தகராறு செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் எஸ்.பி., ஒருவர் ஏன் ரோட்டில் தகராறு செய்கிறீர்கள் என கேட்டார். சாதாரண உடையில் இருந்தது எஸ்.பி., என தெரியாமல் அவரது சட்டையை பிடித்து மூவரும் அடிக்க பாய்ந்தனர். உடனே, பெரியக்கடை போலீசுக்கு தகவல் பறந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நடுரோட்டில் எஸ்.பி.யிடம் தகராறில் ஈடுபட்ட வசந்த், திவாகர், சதிஷ் ஆகியோரை போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். அவர்கள் வேனில் ஏற மறுத்து, கான்ஸ்டபிள்களின் சட்டையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் சாலையில் பரபரப்பு நிலவியது.
பின், மூவரும் ஒருவழியாக வேனில் ஏற்றப்பட்டு, பெரியக்கடை போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். மூவர் மீதும் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து. அவர்களை கைது செய்தனர்.
பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

