/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளம் சீரமைப்பு பணி: முன்னாள் முதல்வர் பார்வை
/
குளம் சீரமைப்பு பணி: முன்னாள் முதல்வர் பார்வை
ADDED : ஜூன் 21, 2025 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பத்தில் முழியன் குளம் சீரமைக்கும் பணியை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த முழியன் குளம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தனியார் வங்கி மற்றும் தனியார் நிறுவனம் (என்.ஜி.ஓ) மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தரம்மாள் சாரி டபுள் சொசைட்டி உதவியுடன் குளத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட காங்., நிர்வாகிகள் குளத்தை பார்வையிட்டனர்.