/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்திசெமினார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
பெத்திசெமினார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 23, 2025 05:10 AM

புதுச்சேரி : பெத்தி செமினார் சி.பி.எஸ்.சி., பள்ளியில் சாதனை புத்தகம் மற்றும் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற, பல்வேறு சாதனை செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி, பெத்திசெமினார் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவர்கள்பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பள்ளி 7ம் வகுப்புமாணவர், சாய் பிரணவ்கண்கள் கட்டப்பட்ட நிலையில், 6 நிமிடத்தில் விமான வியல் தொடர்பான 100 குழப்பமான சொற்களை வாசித்தார். தொடர்ந்து,4ம் வகுப்பு மாணவர் தர்ஷித், எல்.கே.ஜி., மாணவி, சமீரா ஆகியோர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர்.
அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்கள் சபாநாயகர் செல்வம், வேளாண்த்துறை மேற்பார்வையாளர் செல்வ சரவணன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.