ADDED : ஜூலை 31, 2026 06:23 AM

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி. கல்லுாரி) ஸ்லிங்நியோ பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான ஸ்லிங்நியோ ஸ்மார்ட் கேம்பஸ் ரூபே ப்ரீபெய்டு கார்டு அறிமுகப்படுத்தும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
செயலாளர் நாராயணசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், சிறப்பு விருந்தினர் அடல் இன்கியுபேஷன் மையத்தின் புதுச்சேரி தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வர்தன் ஆகியோர் பங்கேற்று பேசினார்.
பேவாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் சிந்தா ரவி பிரசாந்த், தொழில்நுட்ப இயக்குநர் அனிதா வட்டி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்த ஸ்மார்ட் அட்டையின் மூலம் மாணவர்கள் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கவும், வணிக வளாகங்கள் மற்றும் விற்பனை முனைய இயந்திரங்களில் பணம் செலுத்தவும், இணையவழி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும், கல்லுாரி கட்டணங்களை செலுத்தவும், ஸ்லிங் நியோ செயலியின் மூலம் பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும் முடியும்.
இந்த அட்டை மாணவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை வழங்குவதோடு சிறப்பு கேஷ்பேக் சலுகைகள் பெற முடியும்.
தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிவக் குமார் நன்றி கூறினார்.
