தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு: கவர்னர், முதல்வர் பங்கேற்பு

பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு: கவர்னர், முதல்வர் பங்கேற்பு


ADDED : ஜன 09, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2024 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை திட்ட பயணாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், கவர்னர், முதல்வர், அரசு செயலர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள் உரிய காலத்திற்குள், அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நவ., 15ம் தேதி துவங்கப்பட்டது.

இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி, அடிக்கடி கலந்துரையாடி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று கலந்துரையாடல் நடத்தினார்.

இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனி ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ராமலிங்கம், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜிவ் வர்மா, அரசு செயலர்கள் ராஜி, ஆஷிஷ் மாதோவ்ராவ் மோரே, முத்தம்மா, ஜெயந்த்குமார் ரே, கலெக்டர் வல்லவன், அரசு செயலர் கேசவன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சாய் இளங்கோவன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் துறை தாசில்தார் அய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், மத்திய அரசு திட்டங்களின் கீழ் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு, உஜ்வாலா திட்டம், பிரதமர் வீடுகட்டும் திட்டம், முத்ரா கடன் திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக கவர்னர் தமிழிசை வாசிக்க அனைவரும் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us