Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் 

தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் 

தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் 


ADDED : ஏப் 22, 2025 04:26 AM

Follow on Google

ADDED : ஏப் 22, 2025 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று கல்வித்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 770 நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆனால், அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோரிக்கையை வலியுறுத்தி கல்வித்துறை இயக்குனரை அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், தொகுப்பூதியம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோர்ட் மூலம் பணிநிரந்தரம் செய்ய ஆணையை பெற்று வந்துள்ள ஆசிரியர்களுக்கு, இனியும் காலம் கடத்தாமல் பணி நியமன ஆணையை கல்வித்துறை இயக்குனர் உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap