/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரை கண்டித்து சட்டசபை நோக்கி ஊர்வலம்
/
முதல்வரை கண்டித்து சட்டசபை நோக்கி ஊர்வலம்
ADDED : மே 30, 2025 11:48 PM

புதுச்சேரி : முதல்வரை கண்டித்து இண்டியா கூட்டணி இளைஞர்கள், மாணவர் அமைப்பினர் சட்டசபை நோக்கி சென்ற ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல், மாடு வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டலாம் என, முதல்வர் கருத்து தெரிவித்தாக கூறி இண்டியா கூட்டணி இளைஞர்கள், மாணவர் அமைப்பினர் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் சிலை அருகே துவங்கிய ஊர்வலத்தை அனைத்து இந்திய இளைஞர் அமைப்பு மாநில செயலாளர் எழிலன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், எருமை மாட்டின் தலை வடிவத்தை பட்டமளிப்பு விழா கவுண் அணிந்த இளைஞர் ஒருவர் தலையில் மாட்டிச் சென்றார். ஊர்வலம், நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றனர்.
அவர்களை பெரியக்கடை போலீசார் ஜென்மராக்கினி மாதா கோவில் அருகே பேரிகார்டு வைத்து தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்தில் சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்காமல் அவர்களை மாடு வளர்க்க சொல்வதா என, முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.