/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளியில் கற்றல் கையேடு வழங்கல்
/
பள்ளியில் கற்றல் கையேடு வழங்கல்
ADDED : ஜன 11, 2024 11:53 PM

பாகூர்: பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவிகளுக்கு 'வழிகாட்டி கையேடு' வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் அதிக மதிப்பெண் எடுக்கவும் கல்வித்துறை பல புதிய முயற்சிகளை செய்து வருகிறது. அதன்படி, பாகூர் கஸ்துாரி காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கற்றல் பொருள் கையேடு (மெல்ல கற்போருக்கான வழிகாட்டி கையேடு) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கி, கற்றல் கையேடுகளை மாணவிகளுக்கு வழங்கினார். தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார். தமிழாசிரியர்கள் ஜானகி, வடிவுக்கரசி ஆங்கில ஆசிரியர்கள் பிங்கி, ராஜி, சாம் பவுல் ராஜ், கணித ஆசிரியர் அருணா, அறிவியல் ஆசிரியர் லதா, சமூக அறிவியல் ஆசிரியர்கள் நாகராஜ், பத்மினி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

