Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம்


ADDED : நவ 05, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 06:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., நான்கு நாள் சிறப்பு விற்பனை முகாம் நாளை நடக்கிறது.

இதுகுறித்து முதன்மை பொதுமேலாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் வரும் நாளை (6 ம் தேதி ) துவங்கி 9ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.

முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட் போஸ்ட் ஆஃபீஸ் அலுவலகம் அருகில், லாஸ்பேட் ராஜீவ் பார்க் அருகில், பத்துக்கண்ணு ஜங்ஷன், கரியமாணிக்கம், அரும்பார்த்தபுரம், மதகடிபட்டு, வில்லியனுார் , ஏம்பலம், கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இந்த சிறப்பு முகாமில் புதிய சிம் கார்டு வாங்குபவர்களுக்கும், பிற நெட்வொர்க்கில் இருந்து எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கும் சிம் இலவசமாக தரப்படும்.

மேலும் தற்போதுள்ள 2ஜி/3ஜி சிம் வைத்திருப்பவர்கள் 4ஜி சிம்மாக இலவசமாக மேம்படுத்திகொள்ளலாம். வாடிக்கையாளர் தங்களிடம் உள்ள சிம்கார்டுகள் பற்றி விபரம் அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து, சிம்மை பற்றிய விபரம் தெரிந்து கொள்ள முடியும்.

இதற்கான குறுஞ்செய்தியையும் பெற்றுக் கொள்ளலாம் இந்த சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே.

மேற்கண்ட இடங்களில் புதிய 4ஜி சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4 ஜிபி இலவச டேட்டாவையும் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us