/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் லேப்டாப் திருடிய துாத்துக்குடி வாலிபர் கைது
/
புதுச்சேரியில் லேப்டாப் திருடிய துாத்துக்குடி வாலிபர் கைது
புதுச்சேரியில் லேப்டாப் திருடிய துாத்துக்குடி வாலிபர் கைது
புதுச்சேரியில் லேப்டாப் திருடிய துாத்துக்குடி வாலிபர் கைது
ADDED : ஜன 27, 2024 06:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி பஸ் நிலையத்தில் லேப்டாப் திருடிய துாத்துக்குடி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பஸ் நிறுத்ததில் நேற்று அதிகாலை லேப்டாப் பையுடன் சந்தேகத்திடமாக வாலிபர் நின்றிருந்தார். அவரை உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர், துாத்துக்குடி, சாத்தான்குளம், மேலத்தெரு சங்கரன் குடியிருப்பைச் சேர்ந்த உத்திரபிரபு, 39; என்பதும், பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கடை வைத்திருப்பது தெரியவந்தது. போதிய வருமானம் கிடைக்காததால் லேப்டாப் திருடி வருவதாகவும், கடந்த 11ம் தேதி புதுச்சேரி பஸ் நிலையத்தில் நின்றிருந்த பஸ்சில் இருந்து லேப்டாப் ஒன்றை திருடியதை ஒப்புக் கொண்டார்.
இவர், கடந்த 2020ல் ஒரு லேப்டாப் திருடி சிறைக்கு சென்றது தெரியவந்தது.
உத்திரபிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.
அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.