/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ்கள் வழக்கம் போல் இயங்கின புதுச்சேரியில் பாதிப்பில்லை
/
பஸ்கள் வழக்கம் போல் இயங்கின புதுச்சேரியில் பாதிப்பில்லை
பஸ்கள் வழக்கம் போல் இயங்கின புதுச்சேரியில் பாதிப்பில்லை
பஸ்கள் வழக்கம் போல் இயங்கின புதுச்சேரியில் பாதிப்பில்லை
ADDED : ஜன 10, 2024 01:59 AM

புதுச்சேரி, : தமிழகத்தில் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தத்தால், புதுச்சேரியில் பாதிப்பில்லை. வழக்கம்போல் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கின.
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று முதல் சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. புதுச்சேரியிலும் இப்போராட்டம் நடந்தது.
உப்பளம் பகுதி, அம்பேத்கர் சாலையில் உள்ள தமிழக அரசு பேருந்து கழக பணிமனையில் இருந்து நேற்று காலை 8:00 மணி வரை, ஐந்து பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்கள், சென்னைக்கு இ.சி.ஆர்., மற்றும் திண்டிவனம் வழித்தடங்களில் இயக்கப்பட்டன. தொ.மு.ச., தொழிற்சங்க டிரைவர்கள் பஸ்களை இயக்கினர்.
அதேவேளையில் மற்ற தொழிற்சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதனால், 50 சதவீத அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு திரண்ட சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், 50க்கும் மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம், கடலுார், திண்டிவனம், மரக்காணம் மட்டுமின்றி, பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலை, திருச்சி, காஞ்சிபுரம், வேலுார் உட்பட பல பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயங்கின.
புதுச்சேரி அரசு பஸ்கள் மட்டுமின்றி, தனியார் பஸ்களும் வழக்கம் போல் இயங்கியதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. புதுச்சேரியில், 65 சவீதத்திற்கும் மேலான சேவையை தனியார் பஸ்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

