/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்களுக்கு நிவாரணம் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
மீனவர்களுக்கு நிவாரணம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜன 10, 2024 01:47 AM

புதுச்சேரி : மீனவர்களுக்கு மழை நிவாரண உதவித் தொகையாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முதல்வரிடம் மனு அளித்தார்.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரபாளையம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நேற்று அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.
மனுவில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மீனவர்களும், கடந்த 4 மாதங்களாக இயற்கை சீற்றத்தினால், மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல், குடும்பத்துடன் வறுமையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நிவாரண உதவி தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில், தெரிவித்துள்ளார்.
அப்போது, தி.மு.க., நிர்வாகிகள் செங்குட்டு, ராஜி, விநாயகம், ஜீவா, இருதயராஜ், சாந்தகுமார், கிருஷ்ணா, ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

