/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் தகராறு தீர்வு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப கோரிக்கை
/
நுகர்வோர் தகராறு தீர்வு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப கோரிக்கை
நுகர்வோர் தகராறு தீர்வு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப கோரிக்கை
நுகர்வோர் தகராறு தீர்வு ஆணைய தலைவர் பதவியை நிரப்ப கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2025 02:48 AM

புதுச்சேரி : மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணைய தலைவர் பதவியை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நிரப்பக்கோரி புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு முதல் மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதில், மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி பொங்கியப்பன், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ராஜினாமா செய்தார். அதன்பின் இதுவரை அப்பணிக்கு நீதித்துறை உறுப்பினர் ஒருவரும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் நியமிக்கப்படாமல் காலியாக உள்ளது.
தற்போது இரண்டு நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது முறையற்றது மற்றும் சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வழக்கறிஞர்களுக்கு சிரமத்தினை ஏற்படுத்துகிறது.
எனவே, புதுச்சேரி மாநில நுகர்வோர் தகராறு தீர்வு ஆணையத்திற்கு ஒரு நீதித்துறை உறுப்பினர் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு தலைவராக உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.