/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு செயலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
/
அரசு செயலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
ADDED : மே 31, 2025 01:44 AM

புதுச்சேரி : கோவா அரசு செயலர் வல்லவனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நேற்று நடந்தது.
மத்திய தேர்வாணையம் மூலம் தேர்வாகி 1994ம் ஆண்டு புதுச்சேரி குடிமைப் பணியில் சேர்ந்தவர் முன்னாள் கலெக்டர் வல்லவன். புதுச்சேரி நகராட்சி திட்ட அதிகாரியாக, பணியை துவங்கிய இவர், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனராகவும், உள்ளாட்சித்துறை இயக்குனராகவும் பணியாற்றினார்.
அப்போது, 33 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி, உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட விதிகளை உருவாக்கினார். காரைக்கால், மாகே கலெக்டராகவும், பிப்டிக் மேலாண் இயக்குனர், தொழிலாளர் துறை இயக்குனர், தொழில்துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, புதுச்சேரி கலெக்டராக பணிபுரிந்தார். கடந்த 2024ம் ஆண்டு கோவாவிற்கு மாற்றப்பட்ட வல்லவன், நேற்று ஓய்வு பெற்றார். அவர் வகித்த மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை சிறந்த துறையாக தேர்வு செய்யப்பட்டு, முதல்வரால் விருது வழங்கப்பட்டது.
கோவாவில் பணி ஓய்வு பெற்ற செயலர் வல்லவனுக்கு, கோவா தலைமை செயலர் கந்தவேலு சால்வை அணிவித்து பாராட்டினார்.