/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை அமைக்கும் பணி : ஆணையர் ஆய்வு
/
சாலை அமைக்கும் பணி : ஆணையர் ஆய்வு
ADDED : ஜூன் 19, 2025 05:32 AM

திருக்கனுார் : சுத்துக்கேணியில் தார் சாலை அமைக்கும் பணியை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு செய்தார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி சுத்துக்கேணி, வாதானுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் தார்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.
அப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான நமச்சிவாயம் கொம்யூன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில், சுத்துக்கேணியில் நடந்து வரும் தார்சாலை அமைக்கும் பணியினை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வில், சாலை அமைக்கும் பணியினை விரைந்து முடிப்பதுடன், தரமாக அமைக்க வேண்டுமென ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனா மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.