/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர வியாபார குழு தேர்தல் ரத்து; மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு
/
சாலையோர வியாபார குழு தேர்தல் ரத்து; மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு
சாலையோர வியாபார குழு தேர்தல் ரத்து; மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு
சாலையோர வியாபார குழு தேர்தல் ரத்து; மறியல் போராட்டத்தில் தள்ளு முள்ளு
ADDED : ஜன 10, 2024 01:57 AM

புதுச்சேரி : சாலையோர வியாபார குழு தேர்தல் ரத்து செய்ததை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி நகராட்சியில், சாலையோர வியாபார குழுவிற்கு, 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் இரு முறை அறிவித்து ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது முறையாக கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று தேர்தல் நடத்துவதாக இருந்தது. பல்வேறு தொழிற்சங்கத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலை நகராட்சி நிர்வாகம் திடீரென ரத்து செய்தது. இதையடுத்து, ஏ.ஐ.டி.யு.,சி., தொழிற்சங்கம் சார்பில், நேற்று புதுச்சேரி நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலாளர் சேதுசெல்வம், மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினர்.
கம்பன் கலையரங்கில் இருந்து புறப்பட்டு திடீரென புஸ்சி வீதியில் மறியலில் ஈடுபட்டனர். ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மறியலை கைவிட்டு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் அதிகாரியான சாம்பவசிவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து புறப்பட்டு, தலைமை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.

