/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., பரிசளிப்பு
/
ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., பரிசளிப்பு
ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., பரிசளிப்பு
ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி நாஜிம் எம்.எல்.ஏ., பரிசளிப்பு
ADDED : ஜூன் 19, 2025 07:22 AM

காரைக்கால் : காரைக்காலில் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்விளையாட்டு அரங்க மைதானத்தில் 8ம் ஆண்டு ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் நடந்தது.
காரைக்கால் நகர் பகுதி மற்றும் திருநள்ளார், திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 6 வயது முதல் 18 வயது வரை உள்ள 200க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நாஜிம் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வின்சென்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.