/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிக்கு பிறந்த நாள் போஸ்டர்; 5 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு
/
ரவுடிக்கு பிறந்த நாள் போஸ்டர்; 5 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு
ரவுடிக்கு பிறந்த நாள் போஸ்டர்; 5 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு
ரவுடிக்கு பிறந்த நாள் போஸ்டர்; 5 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு
ADDED : ஜன 27, 2024 06:30 AM
அரியாங்குப்பம் : ரவுடியின் பிறந்த நாளுக்கு போஸ்டர் ஒட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அரியாங்குப்பம் ஓடவெளியை சேர்ந்தவர் அஸ்வீன், 28; ரவுடியான இவர் மீது, புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை வழக்குகள், நாட்டு வெடிகுண்டு வீசியது உட்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவரது பிறந்த நாளைக்கு, நேற்று கடலுார் பைபாஸ் சாலை மற்றும் அரியாங்குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் படத்துடன் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ரவுடிக்கு ஆதாரவாக போஸ்டர் ஒட்டிய, அரியாங்குப்பம் அரவிந்த், ஜான், விஜய், பிரகாஷ், சுபாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.