/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ. 21.12 லட்சத்தில் சிமென்ட் சாலை
/
ரூ. 21.12 லட்சத்தில் சிமென்ட் சாலை
ADDED : பிப் 01, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் பகுதியில் ரூ. 21.12 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம், அண்ணா நகர், பெரியாண்டவர் கோவில் வீதி ஆகிய இடங்களில் சாலை அமைக்க தொகுதி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து, சிமென்ட் சாலை அமைக்க எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 21.12 லட்சம் ஒதுக்கப்பட்டது.
சாலைப் பணியை பாஸ்கர் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

