/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடையை மீறி இறைச்சி, மதுபானம் விற்பனை
/
தடையை மீறி இறைச்சி, மதுபானம் விற்பனை
ADDED : ஜன 17, 2024 08:33 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் திருவள்ளுவர் தினத்தில் தடையை மீறி மாட்டு இறைச்சி, மதுபானங்கள் விற்பனை ஜோராக நடந்தது.
திருவள்ளுவர் தினத்தையொட்டி புதுச்சேரி முழுதும் மதுபானம் விற் பனை செய்ய கலால்துறை தடை விதித்தது.
நகராட்சி மற்றும் கொம்யூன் சார்பில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது.
மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், அருகில் கிளை கடைகள் துவங்கி ஆங்காங்கே மதுபானம் விற்பனை சரளமாக நடந்தது.
புதுச்சேரி கடற்கரைக்கு வந்த வெளிமாநில இளைஞர்கள் கையில் மதுபாட்டிலுடன் கடற்கரையில் வலம் வந்தனர்.
கிராமங்களில் குறிப்பாக திருக்கனுார், வில்லி யனுார், பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் நகர பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை நடந்தது.
அதுபோல் இறைச்சி கடைகள் வழக்கம்போல் திறந்து விற்பனை நடந்தது. சுல்தான்பேட்டையில் மாட்டு இறைச்சி கடைகள் வரிசையாக திறந்து வியாபாரம் நடந்தது. இதுபோல், கோழி இறைச்சி, மீன் கடைகள் வழக்கம்போல் இயங்கியன.

