/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க 2ம் ஆண்டு துவக்க விழா

ADDED : ஜூன் 21, 2025 12:52 AM

திருபுவனை : புதுச்சேரி, திருபுனை தொகுதிக்குட்பட்ட சன்னியாசிக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
சன்னியாசிக்குப்பம் தலைவர் சுப்ரமணி தலைமை தாங்கினார். சங்க தலைவர் சம்பத் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா கலந்துகொண்டு சங்க தலைவர் மற்றும் இயக்குனர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
சங்க துணைத் தலைவர் முத்துலட்சுமி, முன்னாள் தலைவர் கிருஷ்ணதாஸ் மற்றும் இயக்குனர்கள், என்.ஆர் காங்., பிரமுகர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் சார்பில், மினி டிராக்டர் கொள்முதல் செய்ய பதிவாளரின் கொள்முதல் குழுவின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. டிராக்டர் வாங்க அரசு மானியமாக ரூ. 4.50 லட்சம் பெற்று புதுவை மாநில கூட்டுறவு வங்கி கடன் ரூ.2.12 லட்சம் பெற்று டிராக்டர் வாங்க முடிவு செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை சங்க மேலாளர் வெங்கடேசன் செய்திருந்தார். செல்வம் நன்றி கூறினார்.