ADDED : மார் 08, 2024 06:44 AM
அ நிறம் | அளவு
பாகூர் : கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் செல்வம்பாள் தலைமை தாங்கினார். ஆசிரியர் வனிதா வரவேற்றார். துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மூன்றாம் வட்ட பள்ளி ஆய்வாளர் லிங்குசாமி வாழ்த்தி பேசினார்.
ஆசிரியர் வசந்தி தொகுப்புரையாற்றினார். ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார்.
