/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டபம் 23ம் ஆண்டு விழா
/
சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டபம் 23ம் ஆண்டு விழா
சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டபம் 23ம் ஆண்டு விழா
சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டபம் 23ம் ஆண்டு விழா
ADDED : ஜூன் 20, 2025 02:46 AM
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., சீரடி சாயிபாபா நகரில், கமல சாயிபாபா கோவில் அமைந்துள்ளது. கோவிலில், சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டபம் 23வது ஆண்டு விழா மற்றும் 108 கலச அபிேஷக விழா நேற்று துவங்கியது.
இதையொட்டி, காலை கொடியேற்றம், மாலை கோ பூஜை நடந்தது. இன்று (20ம் தேதி) காலை 9:00 மணிக்கு வடுக பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, குரு பூஜை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு முதற்கால யாக சாலை பூஜை, தேவதா அனுக்ஞை யஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபம், மகா சங்கல்பம், வேதிகா அர்ச்சனை, அக்னி கார்யம், திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, வேத உபசாரம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, நாளை 21ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, அக்னி கார்யம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு, 108 கலச அபிேஷகம், 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் நடக்கிறது.