/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளநிலை பொறியாளர்கள் பற்றாக்குறை: பணிகள் பாதிப்பு
/
இளநிலை பொறியாளர்கள் பற்றாக்குறை: பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 17, 2024 01:20 AM
புதுச்சேரி : மண்ணாடிப்பட்டு, திருபுவனை தொகுதிக்கான பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் 11, கீழ் பத்துக்கண்ணு, சுத்துக்கேணி,திருக்கனுார், வாதானுார், திருபுவனை பகுதிகளில் பொதுப்பணிதுறை தொடர்பான திட்ட பணிகளை மேற்கொள்ள 5 இளநிலை பொறியாளர்கள் பணியாற்ற வேண்டும்.
ஆனால், தற்போது 5 பகுதிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இளநிலை பொறியாளர் தேவேந்திரன் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
4 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அப்பகுதியில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால்,அரசு கட்டடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், அரசின் நலத்திட்ட பணிகள் தடைப்படுவதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, திருபுவனை, மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காலியாக உள்ள பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் பதவிகளை உடனடியாக நிரப்பி, திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

