/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிட்டுக்குருவி கூண்டு: பாரதி பூங்காவில் அமைப்பு
/
சிட்டுக்குருவி கூண்டு: பாரதி பூங்காவில் அமைப்பு
ADDED : மார் 21, 2025 05:21 AM

புதுச்சேரி: உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு, பாரதி பூங்காவில், கூண்டுகள் அமைக்கும் பணியை நகராட்சி கமிஷனர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. அதனை மீட்டெடுக்கவும், அவைகள் எதிர்நோக்கும் பிரச்னைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று உலக சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி, புதுச்சேரி சிட்டுக் குருவிகள் பசுமை இயக்கம் சார்பில் பாரதி பூங்காவில் குருவிகளுக்கான கூண்டுகள் அமைக்கும் பணி நடந்தது. நகராட்சி கமிஷனர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் கூண்டுகள், பறவைகளுக்கு தண்ணீர் குடுவை, உணவு கலன்கள் என 600க்கும் மேற்பட்டவை வைக்கப்படவுள்ளது.
சிட்டுக்குருவிகள் பசுமை இயக்கம் மூலம் இதுவரையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூண்டுகள் புதுச்சேரி முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூண்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.