/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தார் சாலை பணிகள்: எம்.பி., துவக்கி வைப்பு
/
தார் சாலை பணிகள்: எம்.பி., துவக்கி வைப்பு
ADDED : ஜன 11, 2024 04:03 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில், எம்.பி., நிதியின் மூலம் புதிய தார் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட, காமராஜ் நகர் வார்டு திருமுருகன் வீதி, அன்னை வேளாங்கண்ணி வீதி, சவுரிராஜன் வீதி ஆகிய பகுதிகளில், 22 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சாரம் வார்டு தென்றல் நகர் பிரதான சாலை, முதல் வீதி, குறுக்கு வீதி ஆகிய பகுதிகளிலும் 20 லட்சம் மதிப்பில், புதியதார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இப்பணிகளை வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், காங்., துணை தலைவர் தமிழரசி, காங்., சிறப்பு அழைப்பாளர் லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

