/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா
/
ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா
ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா
ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா
ADDED : ஜன 26, 2024 05:22 AM

புதுச்சேரி : ராமலிங்க சுவாமி கோவில் மடத்தில் தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது.
முதலியார்பேட்டையில் உள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் (ராமலிங்க சுவாமி கோவில் மடம்) 75ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.
சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொறுப்புத் தலைவர் ஜெகநாதன், சத்திய ஞானக்கொடியை ஏற்றினார்.
தைப்பூசமான நேற்று காலை, திரு அகவல் ஓதுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, ஏழு திரைகள் நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு (ஜோதி தரிசனம்) நடந்தது.
தொடர்ந்து, தலைமை சன்மார்க்க கூட்டமைப்பின் தலைவர் கணேசன் தலைமையில் சிறப்பு சொற்பொழிவும், ஜோதி தரிசன வழிபாடும் நடந்தது. மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில், சஜிதா கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீணையில் அருட்பா இசை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. அருட்பா இசை, யோகா மற்றும் அருட்பா பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஜோதி தரிசன வழிபாடு நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, ராமலிங்க சுவாமி கோவில் மடத்தின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சரவணன், செல்வநாதன் செய்திருந்தனர்.

