/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலவாரியமாக மாற்றிய முதல்வருக்கு நன்றி
/
நலவாரியமாக மாற்றிய முதல்வருக்கு நன்றி
ADDED : மே 31, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி அரசாணை வெளியிட்ட முதல்வர் ரங்கசாமிக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, புதுச்சேரி அனைத்து கடை ஊழியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அமைப்புசாரா நலச்சங்கத்தை, நலவாரியமாக மாற்றினால், கடை ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ, ஓட்டுனர்கள், கூலி தொழிலாளிகள் என, பல தரப்பட்ட மக்கள் பயன் அடைவார்கள்.
எங்களது கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் ரங்கசாமி, அமைப்பு சாரா நலச்சங்கத்தை, நலவாரியமாக மாற்றி, அரசாணை வெளியிட்டார். அவருக்கு நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.