/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசின் சட்ட வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல்! இனி எளிதாக தொழில் துவங்க தடை இருக்காது
/
புதுச்சேரி அரசின் சட்ட வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல்! இனி எளிதாக தொழில் துவங்க தடை இருக்காது
புதுச்சேரி அரசின் சட்ட வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல்! இனி எளிதாக தொழில் துவங்க தடை இருக்காது
புதுச்சேரி அரசின் சட்ட வரைவிற்கு மத்திய அரசு ஒப்புதல்! இனி எளிதாக தொழில் துவங்க தடை இருக்காது
ADDED : ஜூன் 06, 2025 06:54 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் எளிதாக தொழில் துவங்குவதற்கான சட்ட வரைவிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 77 பெரிய தொழிற்சாலைகள்,191 நடுத்தர தொழிற்சாலைகள், 7872 சிறுதொழிற்சாலைகள்,1157 குறு தொழிற்சாலைகள் என, மொத்தம் 9,307 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 15,873 கோடி அளவிற்கு ஆண்டிற்கு உற்பத்தி நடந்து வருகிறது. மாநிலத்தில் மேலும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மாநிலத்தில் தொழில் துவங்குவதற்கான நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தும் வகையில், கடந்த 2021ல் சட்ட வரைவினை ரெடி செய்தது. இந்த சட்ட வரைவு கவர்னர் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் பல்வேறு கேள்விகளை மத்திய அரசு எழுப்பிய நிலையில் உடனே ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த சட்ட வரைவிற்கு ஒருவழியாக மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. சட்டசபை கூடியதும் இந்த சட்ட வரைவு சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்ததும் புதுச்சேரியில் தொழில்களுக்கு எளிதாக குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுமதி கொடுப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.
30 நாட்களுக்குள்
புதிய சட்ட வரைவின்படி அதிக அளவில் வெளி நாடு, வெளிமாநில முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துறை ரீதியான உரிமங்கள், தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதற்காக வழிமுறைகளை புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத் துறை சுலபமாக்கியுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒற்றை சாளர முறையில் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்கப்பட உள்ளது.
அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் புதுச்சேரியில் தொழில் துவங்க அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அனுமதி பெற்றுவிட முடியும்.
துறைகள் அனுமதி
புதுச்சேரியில் தொழில் துவங்க நினைக்கும் முதலீட்டாளர்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை மாவட்டத் தொழில் மையத்தில் செயல்படும் இந்த தொழில்முறை வழிகாட்டி குழுமத்தினை அணுகி விண்ணப்பித்தால் போதும். தொழில் அனுமதிக்கான விண்ணப்பம் தடையில்லா சான்றிதழ் பெறுவது எளிதாகிவிடும். அங்கிருந்து பல்வேறு துறைகளில் தடையில்லா சான்றிதழ் பெற அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பப்பட்டு விடும்.
தொழிற்சாலைகள் விதியின் கீழ் அனுமதி பெற தொழிற்சாலை மற்றும் கொதிகலன் தலைமை ஆய்வகத்திற்கும், சுற்றுச்சூழல் மாசு, அனுமதிக்காக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும், மனை அனுமதிக்காக நகர மற்றும் கிராம அமைப்பு துறைக்கும், கட்டட வரைப்பட ஒப்புதல் பெற புதுச்சேரி பி.பி.ஏ., திட்ட குழுமத்திற்கும், நிலப்பயன்பாடு மாற்றதிற்கான அனுமதி பெற, நகர மற்றும் கிராம அமைப்பு துறையின் நிலப்பயன்பாடு மாற்று குழுவிற்கும், நிலம் கையகப்படுத்தலில் விலக்கு பெற வருவாய் துறைக்கும், பொது ஆட்சேபனை அனுமதி பெற நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்திற்கும் தடையில்லா சான்றிதழ் கேட்டு, விண்ணப்பம் பிரித்து அனுப்பப்பட்டு விரைவாக அனுமதி தரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.