/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி
/
கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி
ADDED : பிப் 06, 2024 05:57 AM
வில்லியனுார் : கிரிக்கெட் விளையாடிய வீரர் சுருண்டு விழுந்து இறந்தார்.
வில்லியனுார் மெயின்ரோடு கரிக்கலாம்பாக்கம் கோடிசாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார்,38; இவர் நேற்று முன்தினம் மாலை 3:15 மணியளவில் திருக்காஞ்சி ஆண்டியார்பாளையம் பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது ரன் எடுக்க ஓடியபோது விஜயகுமார் மயங்கி விழுந்தார்.
உடன் அவரது நண்பர்கள் அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் உடலை பரிசோதித்து விஜயகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவர் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விஜயகுமார் மனைவி அபர்ணா கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.