/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் வந்த டி.ஐ.ஜி.,
/
'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் வந்த டி.ஐ.ஜி.,
ADDED : ஜன 27, 2024 06:30 AM

புதுச்சேரி : குடியரசு தின விழாவிற்கு போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார், ஹார்லி டேவிட்சன் பைக்கில் வந்து விருந்தினர்கள் கவனத்தை ஈர்த்தார்.
புதுச்சேரி சட்டசபையில் நேற்று காலை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றினார். இந்நிகழ்ச்சிக்கு, போலீஸ் டி.ஐ.ஜி., பிரஜேந்திரகுமார், ஹார்லி டேவிட்சன் ப்பேட் பாய் பைக்கில் வந்தார்.
விழாவிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும், தனித்துவமான சத்ததுடன் வந்த டி.ஐ.ஜி.,யின் பைக்கை வியந்து பார்த்தனர்.
அமெரிக்க மோட்டார் சைக்கிள் நிறுவமான ஹார்லி டேவிட்சன் 'ப்பேட் பாய் (Fat boy)' வகையை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 1,745 சி.சி. திறன் கொண்ட எஞ்சின், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு, 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் என ஏராளமான வசதிகள் உள்ளது. 322 கிலோ எடை கொண்ட இந்த பைக்கின் விலை ரூ. 24 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

