/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்று காலை 10:15 மணிக்கு கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
/
இன்று காலை 10:15 மணிக்கு கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
இன்று காலை 10:15 மணிக்கு கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
இன்று காலை 10:15 மணிக்கு கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
ADDED : ஜன 26, 2024 05:25 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் குடியரசு தின விழாவையொட்டி, இன்று காலை 10:15 மணிக்கு, கவர்னர் தமிழிசை தேசிய கொடி ஏற்றுகிறார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்செல்வன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:
நாட்டின், 75வது குடியரசு தின விழாவையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில், காலை 10:15 மணிக்கு கவர்னர் தமிழிசை தேசிய கொடி ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
தொடர்ந்து, பல்வேறு விருதுகள் மற்றும் போலீசாருக்கு பதக்கங்களை வழங்குகிறார்.
படைப்பிரிவினரின் அணி வகுப்பு, பல்வேறு துறைகளின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பும் நடைபெறும். தொடர்ந்து, சட்டசபை வளாக முகப்பில், முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இரு மாநிலங்களில்
தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை, புதுச்சேரி மாநிலத்திற்கும் பொறுப்பு கவர்னராக உள்ளார். அவர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இன்று காலை 8:45 மணிக்கு, தேசிய கொடி ஏற்றுகிறார்.
விழா முடிந்து, அங்கிருந்து ெஹலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு வரும் அவர், குடியரசு தின விழாவில் பங்கேற்று தேசிய கொடியேற்றுகிறார்.
மதியம் 1:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில், முதல்வர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார்.

