/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் மூழ்கிய வால்பாறை வாலிபரை தேடும் பணி தீவிரம்
/
கடலில் மூழ்கிய வால்பாறை வாலிபரை தேடும் பணி தீவிரம்
கடலில் மூழ்கிய வால்பாறை வாலிபரை தேடும் பணி தீவிரம்
கடலில் மூழ்கிய வால்பாறை வாலிபரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஜன 17, 2024 12:52 AM
புதுச்சேரி : கடலில் மூழ்கி மாயமான வால்பாறை வாலிபரை தேடும் பணி நேற்று 2வது நாளாக நீடித்தது.
கோயம்புத்துார் வால்பாறையைச் சேர்ந்த 9 நண்பர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். நகர பகுதியில் விடுதி ஒன்றில் அறை எடுத்த வாலிபர்கள், மதியம் கடற்கரை சென்றனர்.
நீச்சல் தெரிந்த வால்பாறை, குரங்குமுடி, ஸ்ரீராம் எஸ்டேட்டை சேர்ந்த பாலசுப்ரமணியன் மகன் வினோத், 23; பெட்ரோல் பங்க் ஊழியர். அதே பகுதி சிவா காபி எஸ்ட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் அசோக்குமார், 18; விக்னேஷ், 21; ஆகிய மூவர் மட்டும் பழைய சாராய ஆலை அருகே கடற்கரையில் அமர்ந்திருந்தனர். பகல் 2:00 மணிக்கு வினோத், அசோக்குமார், விக்னேஷ் மூவரும் கடலில் குளித்தபோது, கடல் அலையில் சிக்கி வினோத், அசோக்குமார் இழுத்து செல்லப்பட்டனர்.
அவர்களை விக்னேஷ் காப்பாற்ற முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட வினோத் உடல் கரை ஒதுங்கியது. அசோக்குமாரை தேடும் பணி 2வது நாளாக நேற்று கடலோர காவல், தீயணைப்பு மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணி நடந்தது.

