/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாண்லே நிறுவனத்தில் ஐஸ்கிரீம் மிஷின் திருட்டு
/
பாண்லே நிறுவனத்தில் ஐஸ்கிரீம் மிஷின் திருட்டு
ADDED : ஜன 10, 2024 01:49 AM
புதுச்சேரி : பாண்லே நிறுவனத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் மிஷின் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குருமாம்பேட் வழுதாவூர் சாலையில், புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐஸ்கீரிம் தயாரிக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரெப்ரிஜிரேஷன் பிரிவில், ஏற்கனவே பயன்படுத்திய 300 லிட்டர் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ஐஸ்கீரிம் பிளான்ட் மிஷின் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த மிஷினை கடந்த 26ம் தேதி மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட மிஷின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் என பாண்லே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாண்லே மேலாளர் மூலக்குளம், ஆசிரியர் காலனி, 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சாமிநாதன், 52; மேட்டுப்பாளையம் போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

