/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டில்லி விரைந்தார் நமச்சிவாயம்; பா,ஜ., மேலிடம் அவசர அழைப்பு
/
டில்லி விரைந்தார் நமச்சிவாயம்; பா,ஜ., மேலிடம் அவசர அழைப்பு
டில்லி விரைந்தார் நமச்சிவாயம்; பா,ஜ., மேலிடம் அவசர அழைப்பு
டில்லி விரைந்தார் நமச்சிவாயம்; பா,ஜ., மேலிடம் அவசர அழைப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
புதுச்சேரி : பா.ஜ., மேலிடத்தின் அவசர அழைப்பின்பேரில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் டில்லி விரைந்துள்ளார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், 1.31 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், ஏனாமில் முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் மணி விழாவில் முதல்வர் ரங்கசாமியுடன் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் ஏனாம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், வெற்றி கிடைத்தாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் மக்களுக்காக பணியாற்றுவது தொடரும். என் மீது அன்பு வைத்து அதிக ஓட்டுகளை கொடுத்த மக்களுக்கு தேவையானதை செய்து தருவேன் என்று பேசினார். இதற்கிடையில் பா.ஜ., மேலி டம், அமைச்சர் நமச்சிவாயத்தினை அவசரமாக டில்லிக்கு வர அழைப்பு விடுத்தது.
அதை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு, விசாகப்பட்டினம் சென்ற அமைச்சர் நமச்சிவாயம் அங்கிருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.அவருடன் பா.ஜ., மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி.,யும் விரைந்துள்ளார்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி யடைந்துள்ள சூழ்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் டில்லி விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.