/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி முகாம்
/
மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 26, 2025 11:32 PM

வில்லியனுார்: உறுவையாறு கிராமத்தில் மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் மண்வள மேலாண்மை குறித்து வில்லியனுார் ஆத்மா திட்டத்தின் கீழ் உறுவையாறு சாய்பாபா கோவில் வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு வில்லியனுார் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவ சண்முகம் தலைமை தாங்கினார்.
வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி வரவேற்றார். காரைக்கால் பண்டித ஜவர்கலால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் மோகன் பங்கேற்று மண்வளத்தை காப்பது குறித்து பேசினார். வேளாண் கல்லுாரி மண்ணியல் துறை தலைவர் அருணா, மண்வள அட்டையின் பயன்பாடு குறித்து விரிவாக பேசினார்.
இந்த முகாமில் வில்லியனுார், ஒதியம்பட்டு, திருக்காஞ்சி மற்றும் அரியூர் ஆகிய பகுதிகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை வில்லியனுார் உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்தனர்.
வில்லியனுார் ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.