/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் மின்துறை போட்டித்தேர்வுக்கு பயிற்சி
/
ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் மின்துறை போட்டித்தேர்வுக்கு பயிற்சி
ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் மின்துறை போட்டித்தேர்வுக்கு பயிற்சி
ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் மின்துறை போட்டித்தேர்வுக்கு பயிற்சி
ADDED : மார் 21, 2025 04:50 AM
புதுச்சேரி : அரியாங்குப்பம் ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் மின்துறை இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியுள்ளது.
அகாடமி நிறுவனர் பொறியாளர் சீனு திருஞானம் கூறியதாவது;
அரியாங்குப்பம் ஈகன் இன்ஜினியரிங் அகாடமி கடந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இங்கு, பொறியியல் துறை சார்ந்த அனைத்துமாநில மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்புகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பரில்பொதுப்பணித் துறையில் காலியாக இருந்த 99 இளநிலை பொறியாளர்கள் மற்றும் 69 மேற்பார்வையாளர்களுக்கான போட்டித் தேர்வு நடந்தது.
இதில், ஈகன் இன்ஜினியரிங் அகாடமியில் பயின்ற மாணவர்கள் 14 பேர் இளநிலை பொறியாளர்களாகவும், 11 பேர் மேற்பார்வையாளர்களாகவும் தேர்ச்சி பெற்றனர். கடந்த மாதம் நடந்த 11 உதவி வாகன ஆய்வாளர்கள் பதவிகளில், அகாடமியில் பயின்ற 2 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தற்போது புதுச்சேரி மின்துறையில் 73 இளநிலைப் பொறியாளர்களுக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது.
இந்த வகுப்புகள் நேரடி பயிற்சியாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடக்கிறது.
இதில், சேர்வதற்கு 94433 56700, 82480 29729, 79048 09891 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.ஈகன் இன்ஜினியரிங் அகாடமி துவங்கி வரும் மே 7 ம் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.