ADDED : ஜூன் 10, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் சரத் சவுகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காரைக்காலில் பணிபுரிந்த சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கும், மாகியில் பணிபுரிந்த சீனியர் எஸ்.பி., வினய்குமார் கட்கே, காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், பி.சி.ஆர்., செல் பிரிவில் பணிபுரிந்த எஸ்.பி., தனசேகரன் மாகிக்கும், ஊர்க்காவல் படை பிரிவில் பணிபுரிந்த எஸ்.பி., மர்தினி காரைக்கால் போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
