Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரும்பு திருடிய இருவர் கைது

 இரும்பு திருடிய இருவர் கைது

 இரும்பு திருடிய இருவர் கைது

 இரும்பு திருடிய இருவர் கைது

ADDED : நவ 29, 2025 06:44 AM


Google News
நெட்டப்பாக்கம்: கடையில் இரும்பு திருடிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்துார், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, 63. இவர், புதுச்சேரி, கல்மண்டபம் கிராமத்தில் தங்கி, அங்கு இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் காலை இரண்டு வாலிபர்கள் இரும்பு ராடை திருடிச் சென்றனர்.

அவர்களை கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட சிலர் மடக்கி பிடித்து, நெட்டப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அவர்கள் கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த கலைவேல், 30; இளையபரதன், 22, ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us