/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
/
காரைக்காலில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
காரைக்காலில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
காரைக்காலில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
ADDED : ஜூன் 11, 2025 07:58 AM
காரைக்கால்; காரைக்காலில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால், கோவில் பத்து புதுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்; கம்பி பிட்டர். சில நாட்களுக்கு முன், பக்கத்து வீட்டில் வசிக்கு பெண்ணிடம் கோவில் பத்து, ஓமகுலத்தை சேர்ந்த சந்திரசேகர், 53, என்பவர் வாக்குவாதம் செய்தார். மணிகண்டன் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளியான ஆற்றங்கரை தெருவை சேர்ந்த லாரன்ஸ், 32, இருவரும், நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டை மாணிகண்டன் வீட்டு வாசலில் வீசினர். இதில் வீட்டுவாசலில் உள்ள பொருட்கள் எரிந்தன.
இது குறித்து மணிகண்டன், நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராவ ஆய்வு செய்ததில், பெட்ரோல் குண்டு வீசியது சந்திரசேகர், லாரன்ஸ் என, தெரிந்தது. அதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.