நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மனைவியை பிரிந்து தனியாக இருந்த டைலர் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தார்.
கடலுார் சாலை, நைனார்மண்டபம் சேரன் வீதியை சேர்ந்தவர் ஏகாம்பரம், 40; டைலர். குடும்ப பிரச்னையில் இவரது மனைவி கோபித்து கொண்டு, புதுச்சேரியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றார்.
தனியாக இருந்த ஏகாம்பரம் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. பின், வீட்டில் துாக்கிய அவரை, நேற்று காலை மகன் திலீப் பார்த்த போது, இறந்து கிடந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

